புத்தக அலமாரியில், கட்டுரை வரிசை : ” நூல்கள் நூலகங்கள் நூலகர்கள் ” அபூர்வமான தகவல்களும் மென் நகைச்சுவையும் இழைந்தோடும் சச்சிதானந்தன் சுகிர்தராஜாவின் பத்திகள் சரள நடைக்குப் பேர்போனவை. ‘காலச்சுவடு’, ‘காலம்’ உள்ளிட்ட இதழ்களில் வெளிவந்த அவரது பத்திகள் அடங்கிய தொகுப்பு இது. சுஜாதா, அசோகமித்திரன் முதலியோரின் படைப்புகள், ஆளுமைச் சித்திரங்களில் தொடங்கி, ஜப்பான் அரசு நடைமுறைப்படுத்திய ‘ஆறுதல் அணங்குகள்’ குறித்த நூல்கள், சதாம் ஹுசைன் போன்ற சர்வாதிகாரிகளின் நாவல்கள், ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதி முதலியவை உருவான விதம், அகராதி, சொற்களஞ்சிய உருவாக்கங்களில் மறைக்கப்பட்ட பெண் பங்களிப்பு, பிரசித்திபெற்ற மேற்கத்திய நூலகங்கள் பற்றிய அனுபவம், எழுத்துத் திருட்டு, ஆசிரியர் வாசித்த நாவல்கள், அ-புனைவுகள், புத்தகம் பற்றிய புத்தகங்கள், உலக அளவில் பரிசுகளை வென்ற, வெல்லாத நூல்கள் குறித்த அறிமுகங்கள் எனப் பல்வேறு நதிகளில் நீந்திக் கரையேறுகிறது இந்நூல். புத்தகத்தின் மீதான தன் தீராக் காதலை வார்த்தைக்கு வார்த்தை, வரிக்கு வரி வாசகரிடத்தில் வெகு சுவாரசியமாகக் கடத்துகிறார் சுகிர்தராஜா. – சச்சிதானந்தன் சுகிர்தராஜா – காலச்சுவடு ₹200 Coins 🪙160 இந்த புத்தகம் தேவைப்படுவோர் அழைக்கவும் புத்தக அலமாரி ( ஒவ்வொரு இல்லமும் ) 9488000561 For whatsapp: https://chat.whatsapp.com/HUhJl5bcN7bIrIEPfvDne7 For telegram : https://t.me/joinchat/LpIznBFwFFrai9cyfebPbg

Error retrieving media

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started